Categories
மாநில செய்திகள்

ALERT : இந்த மாவட்டங்களில்….. “அடுத்த 3 மணி நேரத்தில் மழை”….. வானிலை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 2-ம் தேதி வரை மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக மழை பெய்யும் . அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் குறிப்பிட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் சில மாவட்டங்களில் மட்டும் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

Categories

Tech |