பிரபல நடிகர் மற்றும் இயக்குனருக்கு இளம் நடிகர் ஒருவர் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களை நடித்து நடிகர் அந்தஸ்தை தாண்டி இன்று தளபதியாக வளர்ந்து நிற்கும் நடிகர் விஜய் வசூல் சக்கரவர்த்தியாக திகழ்கிறார். இவர் நடித்த பீஸ்ட் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கூட வசூலில் சாதனை படைத்தது. இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர் ஒருவர் நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஏனெனில் நடிகர் அர்ஜுன் தாசுக்கு தற்போது பாலிவுட் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இவர் மலையாள சினிமாவில் வெளியான அங்கமாலி டைரிஸ் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்க இருக்கிறார். இவருக்கு பாலிவுட் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததற்கு முக்கிய காரணம் நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் வில்லன் கதாபத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். இந்த படத்தில் அர்ஜுன் தாஸின் நடிப்பை பார்த்து தான் அவருக்கு பாலிவுட் சினிமாவில் தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளதாம். இதன் காரணமாகத்தான் நடிகர் விஜய்க்கும், லோகேஷ் கனகராஜுக்கும் தான் பாலிவுட் சினிமாவில் நடிக்க இருக்கும் தகவலை முதலில் தெரிவித்ததோடு அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளதாக அர்ஜுன் தாஸ் கூறியுள்ளார்.