அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி அவர்கள் அந்த பொறுப்பை நீக்கிவிட்டு தலைமை நிலைய செயலாளர் என்று ட்விட்டர் பக்கத்தில் மாற்றியுள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக மாறியுள்ளது. அதிமுக தலைவராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பு ஏற்க வேண்டும் என்று அவரின் ஆதரவாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். அதே சமயம் இரட்டை தலைமை என்பதே போதுமானது என ஓபிஎஸ் தரப்பு கூறி வருகிறது. கடந்த 23ஆம் தேதி பொதுக்குழு கூட்டப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டதன் காரணமாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து கூறப்பட்டது.
இதன் காரணமாக ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் இல்லை எனவும், அவர் கட்சியின் பொருளாளர் மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிமுக பொறுப்பை மாற்றி உள்ளார். அதாவது இணை ஒருங்கிணைப்பாளர் என்பதை நீக்கிவிட்டு தலைமை நிலைய செயலாளர் என்று மாற்றியுள்ளார். பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டது என்று தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஓ பன்னீர் செல்வத்திற்கு கடிதம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.