Categories
மாநில செய்திகள்

கன்னியாகுமரியில் திடீர் கடல்சீற்றம்…. படகு போக்குவரத்து நிறுத்தம்…. ஏமாற்றத்துடன் திரும்பிய சுற்றுலா பயணிகள்….!!!!

இன்று காலை 2வது நாளாக விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறை அமைந்துள்ள வங்ககடல் பகுதியில் கடல்நீர் மட்டம் திடீரென்று தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. அதேநேரம் இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் அமைந்துள்ள தெற்கு, மேற்கு கடல் பகுதியில் கடல் சீற்றமாகவும், கொந்தளிப்பாகவும் காணப்பட்டது.

இதன் காரணமாக இன்று காலை காலை 8 மணிக்கு துவங்க வேண்டிய படகு போக்குவரத்து நீண்ட நேரமாகியும் தொடங்கப்படாமல் இருந்தது. இதனிடையில் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று காண்பதற்காக அதிகாலை முதலே படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் கடற்கரையில் நின்றவாறு விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்த்து ரசித்ததோடு தங்களது செல்போன்களில் புகைப்படம், செல்பி எடுத்து சென்றனர்.

எனினும் கடல் சீற்றம் குறையும் பட்சத்தில் படகு போக்குவரத்து துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, ஆரோக்கியபுரம், கோவளம், கீழமணக்குடி, மணக்குடி, பள்ளம் ஆகிய கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாவும் கொந்தளிப்பாகவும் காணப்பட்டது. இதன் காரணமாக மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |