Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பெண்ணிடம் நைசாக பேச்சு கொடுத்து…. பணத்தை அடித்த கும்பல்…. போலீஸ் வலைவீச்சு….!!

செல்போன் உதிரி பாகங்கள் வாங்க வந்த பெண்ணிடம் 2 3\4 லட்சம் பணம் பறித்த மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிவன்குடியேற்று பகுதியில் ரேணுகா என்பவர் வசித்து வருகிறார். இவர் செல்போன் சர்வீஸ் சம்பந்தப்பட்ட பாடத்தை படித்திருப்பதால் ரேணுகாவும் அவருடைய பெரியப்பா குருபரன் என்பவரும் தனது ஊரில் சொந்தமாக செல்போன் விற்பனை கடை வைக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக செல்போன் உதிரிபாகங்கள் வாங்குவதற்காக ஆன்லைன் மூலம் விசாரித்துள்ளனர். அப்போது ரேணுகா ஒருவரது செல்போன் எண்ணை கண்டு அந்த நபருக்கு போன் பேசியுள்ளனர். அதில் அந்த நபரும் குறைந்த விலையில் செல்போன் உதிரிபாகங்கள் தருவதாகவும், திருச்சிக்கு 3 லட்சத்துடன் வரும்படியும் கூறியுள்ளார். இதனால் குருபரனும்,ரேணுகாவும் தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு சென்று அதன்பின் அங்கிருந்து பேருந்தில் திருச்சி வந்தனர்.

இந்நிலையில் இருவரும் பேருந்தில் இருந்து இறங்கி வில்லியம்ஸ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது பணம் குறைவாக இருந்ததால் ஒரு ஏடிஎம்-யிலிருந்து ரூ.38 ஆயிரத்தை எடுத்து அங்கிருந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது மொத்தமாக ரூ.2¾ லட்சத்தை ஒரு பையில் வைத்துக் கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் ரேணுகா மற்றும் குருபரனிடம் அங்கு வந்த 2 பேர் பேச்சு கொடுத்துக் கொண்டே நடந்து சென்றுள்ளனர். இதனையடுத்து ரேணுகாவிடம் இருந்த பணப்பையை அந்த 2 பேர் பறித்துக் கொண்டு அங்கு நின்றிருந்த கருப்புநிற காரில் ஏறி தப்ப முயன்றுள்ளனர். அந்த காரில் மேலும் 3 பேர் இருந்தனர். இதனையடுத்து குருபரன் அந்த காரை பிடித்து கொண்டே ஓடினார்.

அப்போது அவர்களது கார் எதிர்பாராதவிதமாக மற்றொரு காரின் மீது மோதியதில் அவர்களால் மேற்கொண்டு காரை ஓட்ட முடியவில்லை. இதனையடுத்து காருக்குள் இருந்த 3 பேர் பணத்துடன் இறங்கி ஓட்டம் பிடித்தனர். இதற்கிடையே சத்தம் கேட்டு அங்குள்ள டீக்கடை அருகே நின்று கொண்டிருந்த உறையூர் பகுதியில் வசிக்கும் ஆட்டோ டிரைவர் ராஜா ஓடிவந்து கார் அருகே பார்த்த போது காரில் இருந்து இறங்கி ஓடிய மற்றொருநபரை விரட்டி சென்று மடக்கி பிடித்தார். இதற்கிடையே அங்கிருந்த பொதுமக்கள் காரின் அருகே எதுவும் தெரியாததுபோல் நின்ற மற்றொரு நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். இதுகுறித்து அவர்கள் கண்டோன்மெண்ட் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிடிப்பட்ட 2 பேரிடமும் விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் பகுதியில் வசிக்கும் முகமதுஅன்சர், மதுரையில் வசிக்கும் ஜெகநாதன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் முகமது அன்சர் மற்றும் ஜெகநாதனை கைது செய்ததோடு பணத்துடன் தப்பியோடிய 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் பணத்தை பறிகொடுத்த ரேணுகா மற்றும் குருபரன் ஆகிய இருவரையும் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் பணத்துடன் தப்பி சென்ற 3 பேரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Categories

Tech |