ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ராஜா வீதி சாலையில் சத்தியமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து மாணவிகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த கார் நிலைத்தடுமாறி ஆட்டோவின் மீது மோதியது. இந்த விபத்தில் 4 மாணவிகள் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் 3 மாணவிகள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். ஒரு மாணவிக்கு மட்டும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை கொண்டு வருகின்றனர்.