பிரபல நாட்டில் அதிபர் பதவி ஏற்பு விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த மே மாதம் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பெர்டினான்ட் மார்க்கோஸ் ஜூனியர் வெற்றி பெற்றார். இவர் இன்று அதிபராக பதவியேற்றார். இவருடைய பதவி ஏற்பு விழா மணிலாவில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த பதவி ஏற்பு விழாவில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசின் கணவர் மற்றும் சீன துணை அதிபர் வாங் கிஷன் உள்ளிட்ட பல வெளிநாட்டு பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மேலும் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்களும் அதிபர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டனர்.