இந்தியாவின் பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இந்த புதிய வட்டி விகிதங்கள் வருகின்ற ஜூலை 3ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது. அதற்காக இந்தியன் வங்கி தனது MCRL, TBLR, BPLR மற்றும் அடிப்படை வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது.
- MCRL (Marginal cost lending rate) வட்டி 0.15% உயர்த்தப்பட்டுள்ளது.
- TBLR (Treasury Bills Linked Lending rate) வட்டி 0.40% முதல் 0.55% வரை உயர்த்தப்பட்டுள்ளது.
- BPLR (Benchmark Prime lending rate) வட்டி 0.40% உயர்த்தப்பட்டுள்ளது.
- அடிப்படை வட்டி விகிதம் 0.40% உயர்த்தப்பட்டுள்ளது
இந்த புதிய வட்டி விகிதங்கள் உயர்வு காரணமாக வீட்டு கடன், வாகன கடன்,கல்வி கடன் மற்றும் தனிநபர் கடன் போன்ற சில்லறை கடன்களுக்கான வட்டி விகிதம் மேலும் உயரக்கூடும். அது மட்டுமல்லாமல் கடன் வாங்கியவர்கள் செலுத்தி வருகின்ற இஎம்ஐ தொகை உயரும். புதிதாக கடன் வாங்குபவர்கள் மட்டுமல்லாமல் ஏற்கனவே கடன் வாங்கி கடனை திருப்பி செலுத்திக் கொண்டிருக்கும் அனைவருக்கும் இஎம்ஐ தொகை உயரக்கூடும்.இந்த புதிய அறிவிப்பு இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.