Categories
உலக செய்திகள்

கொரோனோவை விரட்டும் ரங்கூன் மல்லி?… படையெடுத்த சீன மக்கள்… எச்சரித்த பீப்பிள்ஸ்..!!

சீனாவில் ரங்கூன் மல்லி கொரோனாவை கட்டுப்படுத்தும் என அந்நாட்டு மக்கள் வேகமாக படையெடுத்து அந்த மருந்தை வாங்க படையெடுத்தனர்.

கொரோனா என்கிற அரிய வகை வைரஸ் காய்ச்சல், சீனா முழுவதும் மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்த வகை வைரஸ் காய்ச்சலினால் சீனாவில் மட்டும் தற்போதுவரை 360-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 16,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனர்கள் மட்டுமின்றி, அந்நாட்டில் தங்கியிருக்கும் பிற நாட்டவருக்கும் இந்த வைரஸ் காய்ச்சல் பரவிவருகிறது. இதனால் சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் இருந்துவருகின்றனர்.

Image result for A claim by Chinese scientists that a liquid made with honeysuckle and flowering plants could help fight the deadly coronavirus"

இந்தநிலையில் சீனாவில் ரங்கூன் மல்லி எனப்படும் சைனீஸ் ஹனிசக்கிள் (Chinese Honeysuckle) தாவரத்தின் தண்டும் இலைகளும் கொடிய கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் திறன் படைத்தவை என்று வுகான் வைராலஜி இன்ஸ்டிடியூட்டும் (Vuhan Virology Institute) Shanghai Institute of Materia Medica -ம் அறிவித்தது.

Image result for A claim by Chinese scientists that a liquid made with honeysuckle and flowering plants could help fight the deadly coronavirus"

இதையடுத்து தாவர சத்து அடங்கிய அந்த மருந்தை வாங்குவதற்கு நூற்றுக்கணக்கான மக்கள் வேகமாக படையெடுத்துள்ளனர். ஆனால், இந்த மருந்தினால் எந்த பலனும் இல்லை. கொரோனாவை தடுக்கவும், குணமாக்கவும் இந்த மருந்தால் முடியாது என்று சீனாவின் கம்யூனிஸ்ட் பத்திரிகையான பீப்பிள்ஸ் டெய்லி (Peoples Daily) எச்சரிக்கை செய்தி விடுத்துள்ளது. இதனிடையே கொரோனா வைரஸ் காய்ச்சலை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடித்து விட்டதாக தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |