அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை விவகாரம் கட்சியையே இரண்டாகி விட்டது. அது மட்டும் அல்லாமல் கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கலவரத்தில் முடிந்தது. இதையடுத்து வருகின்ற ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் இரு பிரிவுகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றன.
இதனிடையே ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பினரின் செயல்பாடு எம்ஜிஆரின் நோக்கத்திற்கு எதிராக உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் இபிஎஸ் தாக்கல் செய்த மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். கட்சியின் அடிப்படை நோக்கத்திற்கு எதிராகவும், அதிமுக உருவாக்கப்பட்டதற்கு எதிராகவும் ஓபிஎஸ் செயல்படுகிறார். அதிமுக விவகாரங்களில் முடிவெடுக்கும் உரிமை பொதுக்குழுவின் அதிகாரத்துக்குட்பட்டது.அதிமுகவின் ஜனநாயக அமைப்பு முறையில் தலையிடுவது போல் நீதிபதிகளின் உத்தரவு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.