சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுகிறது.
சென்னை தெற்கு ரெயில்வே பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. சென்னை கடற்கரை-தாம்பரம் செல்லும் ரெயில் இரவு 11.20 மணி, 11.40 மணி, 11.59 மணிக்கும், தாம்பரம்- சென்னை கடற்கரை செல்லும் ரெயில் இரவு 10.25 மணி, 11.25 மணி, 11.45 மணிக்கும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 2-ந்தேதி மற்றும் 4-ந் தேதிகளில் மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படும்.