Categories
மாநில செய்திகள்

நடமாடும் காசநோய் சோதனை…. கொடியசைத்து துவங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்….!!!!

“காசநோய் இல்லா தமிழ்நாடு-2025” என்ற இலக்கை எட்டும் அடிப்படையில் அந்நோயை கண்டறியும் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவியுடன்கூடிய நடமாடும் மருத்துவ வாகனங்கள் என்ற சிறப்பு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதாவது கிராமங்களில் மக்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று நடமாடும் மருத்துவ வாகனங்கள் வாயிலாக காசநோய் கண்டறியும் விதமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு இந்த காசநோய் கண்டறியும் டிஜிட்டல் ஆம்புலன்ஸ் சேவைக்காக ரூபாய் 10.65 கோடி மதிப்பிலான 23 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் இந்த நடமாடும் மருத்துவ வாகனங்களை கொடி அசைத்து தமிழக முதல்வர் துவங்கி வைத்தார்.

Categories

Tech |