கொலை செய்யப்பட்ட நபரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள மணலி பகுதியில் தி.மு.க. பிரமுகரான சக்கரபாணி என்பவர் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில் ராயபுரம், கிரேஸ் கார்டன் பகுதியில் அமைந்துள்ள தமீம் பானு என்பவரது வீட்டில் கடந்த மே மாதம் சக்கரபாணி தலை இல்லாமல் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவலதுறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சக்கரபாணியின் சடலத்தை கைப்பற்றி பதப்படுத்தி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தமீம் பானு, அவரது தம்பி வாஷிம் பாஷா மற்றும் டில்லி பாபு ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சக்கரபாணியின் தலை அடையாறு ஆற்றில் வீசப்பட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சக்கரபாணியின் தலையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் அவரது தலை கிடைக்கவில்லை. இதனால் நேற்று 51 நாட்களுக்கு பிறகு சக்கரபாணியின் உடல் பிரேத பரிசோதனை செய்த பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குடும்பத்தினரிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.