தமிழகத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனா என்கிற அரிய வகை வைரஸ் காய்ச்சல், சீனா முழுவதும் மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்த வகை வைரஸ் காய்ச்சலினால் சீனாவில் மட்டும் தற்போதுவரை 360-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 16,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனர்கள் மட்டுமின்றி, அந்நாட்டில் தங்கியிருக்கும் பிற நாட்டவருக்கும் இந்த வைரஸ் காய்ச்சல் பரவிவருகிறது. இதனால் சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் இருந்துவருகின்றனர்.
சீனாவில் தங்கி படித்த , பணி செய்த அந்தந்த நாட்டு மக்களை ஒவ்வொரு நாடும் அழைத்து வந்தது. இந்தியாவும் இரண்டு தனி விமானங்களை அனுப்பி அழைத்து வந்தது. கேரளாவில் சீனாவில் இருந்து வந்த 2 பேருக்கு கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்டதாகவும் , அவர்கள் தொடர் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் அம்மாநில அரசு தெரிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாபாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்வீட்_டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் சீனாவிலிருந்து தமிழகம் வந்த 12 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் தமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று உறுதி படுத்தியுள்ளார்.கிங் இன்ஸ்டிடியூட் நடத்தப்பட்ட விரிவான பரிசோதனையின் முடிவில் யாருக்கும் கொரோனா அறிகுறி இல்லை என்று உறுதியாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.
#coronavirus update: As per protocol,samples for 12 passengers tested for #nCoV & declared negative by #KingsInstitute. This confirms there are no cases of #nCoV in TN. #TNHealth continues monitoring & the needed preventive measures are being done .@CMOTamilNadu @MoHFW_INDIA
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) February 3, 2020