சென்னையில் வரும் நான்காம் தேதி தொழில் முதலீட்டு மாநாடு நடைபெற உள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். புதிய தொழில் நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்கிறது. இதனால் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தொழில் துறையில் மாபெரும் மறுமலர்ச்சி செய்யப்பட்டதன் மூலம் கடந்த ஓராண்டில் 2 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது எனவும் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழகத்தில் இந்த ஒரு வருட காலத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக ஏறத்தாழ 394 ஆயிரத்து 975 கோடி ரூபாய் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த முதலீடுகள் வாயிலாக ஏறத்தாழ 26 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 135 ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது என்று பேசியுள்ளார்.