பிரித்தானியா அதிபர் போரிஸ் ஜான்சன் மீது ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக கூறி கன்சர்வேட்டிங் கட்சி எம்.பிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர். இதில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற்று தன்னுடைய அதிபர் பதவியை தக்க வைத்துக் கொண்டார். இந்நிலையில் அதிபர் போரிஸ் ஜான்சனின் பிறந்தநாள் கொண்டாட்டங்களினால் மீண்டும் கன்சர்வேட்டிங் கட்சியின் ஆதரவு பெருமளவு சரியத் தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக பிரித்தானியாவில் முன்கூட்டியே அதிபர் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கு அதிபர் போரிஸ் ஜான்சன் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் நம் நாட்டின் பிரபலமான பத்திரிகை நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பின்படி மக்கள் மத்தியில் தொழிலாளர் கட்சிக்கு 41% ஆதரவும், கன்சர்வேட்டிங் கட்சிக்கு 30 சதவீதம் ஆதரவும் இருப்பதாக வெளியிட்டுள்ளது.