வேன் ஓட்டுநரை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரே காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள கக்கன் காலனி பகுதியில் வேன் ஓட்டுநரான சக்திகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சக்திகுமாருக்கு அதே பகுதியில் வசித்து வரும் ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணுடன் கள்ள தொடர்பு இருந்துவந்துள்ளது. இதனையடுத்து முத்துப்பாண்டி என்பவருக்கும் அந்த பெண்ணுடன் கள்ள தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனால் அந்த பெண்ணுடன் பழக வேண்டாம் என முத்துப்பாண்டியை சக்திகுமார் கண்டித்துள்ளார்.
ஆனால் முத்துப்பாண்டி அதை கேட்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் சக்திகுமாரின் வீட்டிற்கு வந்த முத்துப்பாண்டி அவரிடம் தகராறு செய்துள்ளார். மேலும் ஆத்திரமடைந்த முத்துப்பாண்டி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு சக்திகுமாரை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சக்திகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முத்துப்பாண்டி உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சக்திகுமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் முத்துப்பாண்டியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்து சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.