Categories
சினிமா தமிழ் சினிமா

“எனக்கு மட்டும் ஏன் சேச்சி இப்படி நடக்குது”…. அந்த ஒரு வார்த்தையை என்னால் தாங்க முடியல….. மீனா குறித்து உருகும் தோழி….!!!!!!

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் இறந்தது குறித்து நடன இயக்குனர் கலா மாஸ்டர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் மீனா. இவரின் கணவர் வித்யாசாக சென்ற செவ்வாய்க்கிழமை மரணம் அடைந்தார். நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்நிலையில் இறுதி சடங்குக்கான அனைத்து வேலைகளிலும் மீனாவின் தோழியான நடன இயக்குனர் கலா மாஸ்டர் உடன் இருந்து கவனித்துக் கொண்டார். இந்த நிலையில் வித்யாசாகர் மறைவு பற்றி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பொழுது கலா மாஸ்டர் கூறியுள்ளதாவது, மீனாவும் நானும் 25 வருடங்கள் தோழிகளாக இருக்கின்றோம். வித்யாசாகர் என்னை சேச்சி சேச்சி என்று தான் கூறுவார். மீனா உடைய நல்லது கெட்டது எல்லாவற்றிலும் நான் இருப்பேன்.

மூன்று மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த வித்யாசாகரை மீனா என்னவெல்லாம் செய்ய முடியுமோ செய்து தேற்றிக்கொண்டு வந்தார். மேலும் கோவில், மருத்துவமனை என்று தான் இருந்தார். மீனா எப்பொழுதும் குழந்தைத்தனமாக சிரித்துக்கொண்டே இருந்த நிலையில் அவரை இப்படி பார்க்க முடியவில்லை. மீனாவும் வித்யாசாகரும் வேலையில் அழகா விட்டுக்கொடுத்து செய்வார்கள். மீனா எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குதுன்னு கேட்ட அந்த ஒரு வார்த்தையை என்னால் தாங்க முடியவில்லை. தோழியா மீனாவுக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை செய்வோம் என கூறியுள்ளார்.

Categories

Tech |