ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 MLA _க்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கை இன்று உச்சநீதிமன்றம் விசாரிக்கின்றது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் துணை முதலமைச்சராக இருக்க கூடிய ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். அந்த 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கு வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். சென்னை உத்தரவுக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி மற்றும் அமமுக_வினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
ஏற்கனவே இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தாலும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஓய்வு பெற்று விட்டதால் இந்த வழக்கு மீண்டும் விசாரணை நடைபெறாமல் கிடப்பில் கிடந்தது. இதையடுத்து கடந்த வாரங்களில் தொடர்ச்சியாக தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது.இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று திமுக சார்பில் கூறப்பட்டது.
இதையடுத்து கடந்த 1ஆம் தேதி இந்த வழக்கின் விசாரணை செவ்வாய்க்கிழமை (4ஆம் தேதி ) நடைபெறுமென்றும் , 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கின் விசாரணையை மேற்கொள்ளும் என்று உச்சநீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.இந்நிலையில் 11 MLA_க்கள் தகுதி நீக்க வழக்கு இன்று விசாரணைக்கு வருகின்றது.