Categories
சென்னை மாநில செய்திகள்

இன்று முதல் மின்சார ரயில் சேவைகள் ரத்து…. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில் சேவைகள் அனைத்தும் தற்போது மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை முதல் தாம்பரம் இடையே செல்லும் ரயில் வழி பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் குறிப்பிட்ட மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி சென்னை கடற்கரை முதல் தாம்பரம் செல்லும் இரவு 11.20 மணி, 11.40 மணி, 11.59 மணிக்கு செல்லும் மின்சார ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளதாகவும், தாம்பரம் முதல் சென்னை கடற்கரைக்கு இரவு 10. 25 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், 11. 25க்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரயில் மற்றும் 11.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும் சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வழியாக செல்லும் ரயில் மற்றும் தாம்பரம் முதல் சென்னை கடற்கரைக்குச் செல்லும் ரயில்கள் வருகின்ற ஜூலை 2 மற்றும் 4 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்பட உள்ளது. பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த பிறகு வருகின்ற ஜூலை 5ஆம் தேதி முதல் வழக்கம் போல அனைத்து மின்சார ரயில்களும் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |