Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று(ஜூலை 2)…. காலை 9-2 மணி வரை….. இங்கெல்லாம் கரண்ட் இருக்காது…..!!!!

சென்னையில் சில பகுதிகளில் பராமரிப்பு பணிகள் இன்று  நடைபெற உள்ளதால் மின்தடை குறித்த விவரங்களை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னையில் இன்று (ஜூலை 2) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த பகுதிகளில் எல்லாம் மின்சாரம் இருக்காது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதாவது அண்ணாசாலை, அண்ணாநகர், மயிலாப்பூர், தாம்பரம், போரூர், ஐ.டி காரிடர், ஆவடி, அடையார், கிண்டி, தி.நகர், வேளச்சேரி, அம்பத்தூர், பெரம்பூர், மாதாவரம், எண்ணூர், வியாசர்பாடி, கே.கே நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், அண்ணாசாலை பகுதியை சுற்றியுள்ள பகுதிகளான தம்புசெட்டி தெரு ஒரு பகுதி, லிங்கி செட்டி தெரு ஒரு பகுதி, அங்கப்பன் தெரு ஒரு பகுதி, இராஜா அண்ணாமலை மன்றம், ஸ்டிரிங்கர் தெரு பகுதி, எஸ்பிளனெட் போலீஸ் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் இன்று  காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மீண்டும் மின்சாரம் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |