சென்னையில் நாளை மறுநாள் தொழில் முதலீட்டாளர்களின் பிரம்மாண்ட மாநாடு நடைபெற உள்ளது.இந்த மாநாட்டின் மூலம் 70 ஆயிரம் கோடி முதலீட்டாளர்களுக்கான ஒப்பந்தங்கள் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாக உள்ளது. இதன் மூலம் 70 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் 21 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்படுவதுடன் 12 புதிய திட்டங்களும் தொடங்கி வைக்கப்படுகின்றன.
அதேபோல், கோவை, மதுரை மாவட்டத்தில் லித்தியம் battery, பசுமை ஹைட்ரஜன் சூரிய சக்தி , உள்ளிட்ட தயாரிப்பு நிறுவனங்கள் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் வேலை வாய்ப்பு அதிகரித்து, வேலையில்லா இளைஞர்கள் பயன் பெறுவர்.இதுவரை போடப்பட்ட ஒப்பந்தங்களில் 78 திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. வட தமிழகத்தில் ரூ.5,300 கோடி முதலீடும், மத்திய தமிழகத்தில் ரூ.285 கோடி முதலீடும், தென்தமிழகத்தில் ரூ.16,750 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு மொத்தம் 55,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம் 70 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என அரசு தெரிவித்துள்ளது.