திருவண்ணாமலை வந்தவாசி நகராட்சி ஆணையாளராக பணிபுரிந்து வந்த எஸ்.முஸ்தபா சேலம் மாவட்ட தாரமங்கலம் நகராட்சி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். அங்கு நகராட்சி ஆணையராக பதிவு இருந்த எம். மங்கையரசன் வந்தவாசி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து வந்தவாசி ஆணையராக இன்று அவர் பதவியை ஏற்றுக்கொண்டார்.
அப்போது பேசிய அவர், வந்தவாசி நகரில் நிலுவையில் உள்ள வீட்டு வரி, தொழில் வரி, நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை நிலுவைத்தொகை வசூல் செய்து நகரை மேம்படுத்த முயற்சி செய்வேன். மேலும் முழுமையாக பிளாஸ்டிக் இல்லாத நகரமாக மாற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.