Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. இந்த 500 ரூபாய் நோட்டு செல்லாது?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

நாடு முழுவதும் கடந்த 2016 ஆம் ஆண்டு 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மத்திய அரசு தடை விதித்தது. அதன் பிறகு புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. தற்போது புழக்கத்தில் இருக்கும் இந்த நோட்டுகள் உண்மையானதா மற்றும் போலியானதா என்பது குறித்து மக்கள் மத்தியில் விவாதங்களும் ஏற்பட்டு வருகிறது. இந்த 500 ரூபாய் நோட்டுகள் போலியானவை என்ற தகவல் தற்போது வைரலாக பரவி வருகிறது. அவ்வாறு சமூக வலைத்தளங்களில் ஒரு 500 ரூபாய் புகைப்படம் வைரலாகி வருகின்றது.

அதில் காந்திஜியின் புகைப்படம் அச்சிடப்பட்ட 500 ரூபாய் நோட்டில், அதன் அருகில் பச்சை நிற கோடு ஒன்று உள்ளது. மறுபுறம் இரண்டாவது புகைப்படத்தில் உள்ள பச்சை கோடு காந்திஜியின் புகைப்படத்திலிருந்து சிறிது தொலைவில் இருக்கின்றது. அதில் ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையெழுத்திற்கு அருகில் இந்த கோடு உள்ளது. இது குறித்து சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்தியில்,காந்திஜியின் அருகில் பச்சை கோடு போடப்பட்டிருக்கும் 500 ரூபாய் நோட்டு போலி என்பதால் அதை எடுக்க வேண்டாம் என்றும் மற்றொரு 500 ரூபாய் நோட்டை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையெழுத்து பச்சை நிறக்கோடு உள்ளது என்று செய்தி வெளியானது.அதன் பிறகு இந்த செய்தியை பார்த்தபோது அது போலியான செய்தி என்று தெரியவந்துள்ளது. இந்நிலையில் PIB Fact Check மூலம் இதனை சரிபார்த்த போது இந்த செய்தி போலியானது என கண்டறியப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி இந்த இரண்டு வகையான நோட்டுகளும் செல்லுபடி ஆகும் என தெரியவந்துள்ளது.எனவே இது போன்ற போலியான செய்திகளை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |