Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமியார்…. மருமகளின் கொடூர செயல்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து மருமகள் மாமியாரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள செவ்வாத்தூர் புதூர் காலனியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ராமரோஜா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு புனிதா என்ற மகளும், ஏழுமலை என்ற மகனும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. இந்நிலையில் சென்னையில் ஏழுமலை கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இதனால் செல்வராஜ், மனைவி ராமரோஜா, மருமகள் அம்சா மற்றும் 10 மாத குழந்தை ஆகியோர் வசித்து வந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு செல்வராஜ் பணிக்கு சென்றுவிட்டார். அதன் பின் ராமரோஜா திண்ணையில் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது திடீரென ராமரோஜா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதுகுறித்து செல்வராஜ் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் ஏழுமலை பெரும்பாலும் சென்னையில் இருப்பதால் அதனை பயன்படுத்தி அம்சாவுக்கும் கட்டிட மேஸ்திரியான கார்த்திகேயனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அம்சா அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்ததை ராமரோஜா கண்டித்துள்ளார். இதனால் அம்சாவும், கார்த்திகேயனும் ராமரோஜாவை கொலை செய்ய முடிவு செய்தனர். கடந்த 29-ஆம் தேதி மாமனார் செல்வராஜ் இரவு வேலைக்கு சென்று விட்டார். இதனை பயன்படுத்தி அம்சா கார்த்திகேயனுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.

அதன்பின் கார்த்திகேயன் 17 வயது வாலிபருடன் அங்கு வந்து ராமரோஜாவின் வாய் மற்றும் மூக்கை மூடியதால் அவர் மயக்கம் போட்டு விழுந்துள்ளார். இதனையடுத்து அம்சாவும், கார்த்திகேயனும் சேர்ந்து ராமரோஜாவின் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்துள்ளனர். அதன் பின் வீட்டிற்கு முன்பு ராமரோஜாவை படுக்க வைத்துவிட்டு கார்த்திகேயனும் 17 வயது வாலிபரும் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதனை தொடர்ந்து மறுநாள் காலை அம்சா மாமியாரை கொலை செய்து விட்டனர் என கூறி நாடகமாடி உள்ளார். இந்நிலையில் கள்ளக்காதலுடன் சேர்ந்து அம்சா மாமியாரை கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் அம்சா மற்றும் கார்திகேயனையும் கைது செய்துள்ளனர். மேலும் 17 வயது வாலிபரை செங்கல்பட்டு சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |