Categories
Uncategorized சினிமா

அண்ணனுக்கு வாழ்த்து தெரிவித்த வனிதா….. கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அருண் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் யானை படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படம் இன்று முதல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் கதாநாயக பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகி பாபு, ராதிகா சரத்குமார், KGF புகழ் கருடா ராம், ராஜேஷ், அம்மு அபிராமி, ஜெயபாலன், புகழ், போஸ்ட் வெங்கட், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, ஐஸ்வர்யா, ரமா ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இன்று  வெளியான “யானை” படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில் வனிதா விஜயகுமார் தனது அண்ணன் அருண் விஜயின் யானை படத்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில், கடின உழைப்பு விடாமுயற்சியும் ஒருபோதும் தோல்வியடையாது என்று தெரிவித்துள்ளார். வனிதாவிற்கு அவரது குடும்பத்திற்கும் இடையே சில மனக்கசப்புகள் உள்ளது. இதனால் தனது குடும்பத்தினர் விட்டு விலகி இருக்கிறார். தற்போது அண்ணனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதை ‘இப்படியெல்லாம் செஞ்சாலும் உங்களை மறுபடியும் சேர்த்துக்க மாட்டாங்க’ என்று நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர். ஆனாலும் சிலர் வனிதாவின் இந்த செயலை பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |