பல்வேறு ரயில் நிலையங்களில் லிப்டுகள் மற்றும் தானியங்கி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னை மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் பயணிகளின் பயன்பாட்டிற்காக தெற்கு ரயில்வே பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. அதேபோல் முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் எளிதாக நடந்து செல்லும் வகையில் 21 ரயில் நிலையங்களில் 40 லிப்டுகளும், 18 ரயில் நிலையங்களில் 55 தானியங்கி படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த லிப்டுகள் சுமார் 13 நபர்களை ஒரே நேரத்தில் ஏற்றிச்செல்லும் திறன் உடையது. இந்நிலையில் எழும்பூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், கொரட்டூர், திருநின்றவூர், குமாரம்பேட்டை, பொன்னேரி, வண்ணார்பேட்டை, ராயபுரம் , உள்ளிட்ட ரயில் நிலையங்களில் லிப்டுகள் அமைக்கும் பணிகளும், செங்கல்பட்டு, அரங்கோணம் ரயில் நிலையங்களில் தானியங்கி படிக்கட்டுகள் அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.