பிரபல நடிகையின் கணவர் உடல் நலக்குறைவால் காலமானதால் அவரை நேரில் சந்தித்து அமைச்சர் ஆறுதல் கூறியுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மீனா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். கடந்த 2009-ம் ஆண்டு நடிகை மீனா பெங்களூருவை சேர்ந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு நைனிகா என்ற ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று முன்தினம் நுரையீரல் பிரச்சனை காரணமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் வித்தியாசாகரின் உடல் தகனம் செய்யப்பட்டது. இவரின் இறுதிச்சடங்கில் ஏராளமான திரை பிரபலங்கள் கலந்து கொண்டு நடிகை மீனாவுக்கு ஆறுதல் தெரிவித்தனர். மேலும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று நடிகை மீனாவின் வீட்டிற்கு சென்றார். அவர் நடிகை மீனாவிடம் நீங்கள் கவலைப்படாமல் உங்களை தேற்றிக் கொள்ளுங்கள் என்று ஆறுதல் கூறினார். அதன் பிறகு மீனாவின் மகள் நைனிகாவிற்கும் அமைச்சர் பொன்முடி ஆறுதல் தெரிவித்தார். மேலும் இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகியள்ளது.