Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற பத்திரிக்கையாளர்களுக்கான சந்திப்பு….. கலந்து கொண்ட அதிகாரிகள்…. அறிக்கை வெளியிட்ட ரயில்வே போலீஸ் ஏ.டி.ஜி.பி…..!!!!

ரயில்வே போலீஸ் ஏ.டி.ஜி.பி. வனிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை மாவட்டத்தில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வைத்து பத்திரிக்கையாளர்களுக்கான சந்திப்பு நடைபெற்றது. இதில் ஏ .டி .ஜி. பி. வனிதா, டி. ஐ. ஜி. அபிஷேக், ரயில்வே பாதுகாப்பு படை  மூத்த பாதுகாப்பு கமிஷனர் செந்தில்குமரேசன், ரயில்வே போலீஸ்  முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் ஏ.டி.ஜி.பி. வனிதா 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பயணிகளுக்கான இலவச குடிநீர் கேன்  வழங்கும்  திட்டத்தை தொடங்கி வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கடந்த ஆறு மாதத்தில் மட்டும் 750 கிலோ கஞ்சாவை ரயில்வே காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து ரயில் நிலையங்களில் காணாமல் போன 5 லட்சத்து 97 ஆயிரத்து 420 ரூபாய் மதிப்பிலான  தங்க நகைகளை ரயில்வே காவல்துறையினர் மீட்டுள்ளனர். மேலும் சென்னை மற்றும் திருச்சி மாவட்ட ரயில் நிலையங்களில் திருட்டு போன 1  லட்சத்து 72 ஆயிரத்து 850 ரூபாய் பணத்தையும் மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளனர் என அவர் அந்த அறிக்கையில்  கூறியுள்ளார்.

Categories

Tech |