Categories
சினிமா

“வேகப்பந்து வீரர் கேப்டனாக பணிபுரிவது ஈஸி கிடையாது”…. ராகுல் டிராவிட் ஓபன் டாக்….!!!!!

இங்கிலாந்து நாட்டிற்கு எதிராக நேற்று துவங்கிய 5வது டெஸ்டில் இந்திய அணிக்கு கேப்டனாக வேகப்பந்து வீரரான பும்ரா பணிபுரிந்தார். அதாவது ரோகித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. இதனால் கபில் தேவுக்கு பின் கேப்டன் பொறுப்பை வகித்த வேகப்பந்து வீரர் என்ற பெருமையை பும்ரா பெற்றார். இந்நிலையில் வேகப்பந்து வீரரான பும்ரா கேப்டனாக பணிபுரிவது எளிதல்ல என பயிற்சியாளர் ராகுல்டிராவிட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது “பும்ரா எப்போதும் தன் பந்து வீச்சில் கவனமாக இருப்பார்.

அத்துடன் ஆட்டத்தின் போக்கை கணிப்பதில் வல்லவர் ஆவார். மேலும் ஆட்டத்தின் தன்மைக்கு ஏற்றவாறு திறமையுடன் பந்து வீசக்கூடியவர் ஆவார். பும்ரா இதுவரையிலும் கேப்டனாக இருந்தது இல்லை. இதன் காரணமாக புதிய பொறுப்பு அவருக்கு சவாலானதாக இருக்கும். எனினும் நாங்கள் அவருக்கு எங்களது ஆதரவை தொடர்ந்து அளிப்போம். இதனிடையில் ஒரு வேகப்பந்து வீச்சாளர் கேப்டனாக செயல்படுவது சாதாரணமான காரியமல்ல. தன் பந்து வீச்சிலும் கவனம் செலுத்த வேண்டும். கேப்டனாக உள்ளதை காட்டிலும் பும்ரா ஒரு பந்து வீச்சாளராக எங்களுக்கு அதிகம் தேவை” என்று ராகுல்டிராவிட் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |