Categories
மாநில செய்திகள் ராமநாதபுரம்

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: ராமநாதபுரத்தில் சிபிசிஐடி அதிரடி விசாரணை

டிஎன்பிஎஸ்சி குரூப் – 2 தேர்வு முறைகேடு தொடர்பாக, ராமநாதபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணியாற்றும் பெண் உதவியாளர் குறித்து சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டிஎன்பிஎஸ்சி குரூப் – 2 தேர்வு முறைகேடு தொடர்பாக, ராமநாதபுரத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணிபுரியும் பெண் உதவியாளரிடம் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்துவதற்காக அங்கு சென்றுள்ளனர்.

ஆனால், சம்பந்தப்பட்ட அந்தப் பெண் உதவியாளர் பணியிடை பயிற்சிக்காக, சென்னை சென்றிருப்பதாக அங்கிருந்த அதிகாரிகள் கூறியதைத் தொடர்ந்து, அந்தப் பெண் குறித்த மற்ற தகவல்களை சேகரிக்கும் பணியில் காவல் துறையினர் இறங்கினர்.

அந்த விசாரணையில், அந்தப் பெண் அதிகாரி 2017-18ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்று, பணியில் சேர்ந்திருப்பதாகவும்; அவர் ராமநாதபுரம் பாரதி நகர் பகுதியில் வசித்து வருவதாகவும் அங்கிருந்த அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக சென்னையில் சம்பந்தப்பட்ட உதவியாளரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர். பத்திரப்பதிவு அலுவலகத்தில் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |