அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரில் கைக்குழந்தையுடன் சென்ற இளம்பெண்ணை சுட்டுக் கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்ற மாதம் 29 ஆம் தேதி அஸியா ஜான்சன் என்ற பெண், தன் 3 மாத குழந்தையை மன்ஹாட்டன் பகுதியில் டிராலியில் வைத்து தள்ளிக்கொண்டு சென்றிருந்தார். அப்போது அந்தப் பெண் திடீரென சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆர்க்கோ என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கைதான வாலிபர், அந்த பெண்ணின் முன்னாள் காதலன் என்பது தெரியவந்தது.