Categories
அரசியல் மாநில செய்திகள்

பக்கத்து பக்கத்து ரூமில் OPS, EPS …. இன்னும் சற்று நேரத்தில்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

இந்திய குடியரசு தலைவராக இருந்து வரும் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை மாதம் 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து நாட்டின் 15 வது குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகின்ற ஜூலை 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. அந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் திரவுபதி முர்மு தே.ஜ.கூ கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோர சென்னை வந்தடைந்தார். அவரை சந்திக்க ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் வருகை தந்துள்ளனர்.

அவர்களை தனித்தனி அறைகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதன் பிறகு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் தனித்தனியாக முர்முவை சந்திப்பார்கள் என்று கூறப்படுகிறது.ஒற்றை தலைமை விவகாரத்தில் பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு ஓபிஎஸ், இபிஎஸ் நேரடியாக சந்திக்கவில்லை. இன்று நடைபெறும் சிறப்பு அழைப்பாளர்கள் கூட்டத்தில் திரௌபதி முர்முவை ஆதரிக்க இருவரும் வருவார்களா..? ஒரே மேடையில் அமருவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Categories

Tech |