டெல்லி விமான நிலையத்திலிருந்து ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று இன்று காலை ஜபல்பூருக்குச் புறப்பட்டது. இந்நிலையில் வானில் சுமார் 5000அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, திடிரென்று விமானத்தின் உள் பகுதி கேபினில் புகை வெளிவர துவங்கியது. இதனால் பயணிகள் மற்றும் விமானம் பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே டெல்லி விமான நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின் அந்த விமானம் இன்றுகாலை டெல்லி விமான நிலையத்தில் மீண்டுமாக பாதுகாப்புடன் தரை இறக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என ஸ்பைஸ்ஜெட் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.