Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“இது புதையலில் கிடைத்த நகை” 5 லட்ச ரூபாய் மோசடி செய்த வட மாநில கும்பல்…. வலை வீசி தேடும் காவல்துறையினர்….!!!!

புதையல் நகை எனக்கூறி பண  மோசடி செய்த வட மாநில கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மன்னரை பசும்பொன் நகரில் பாலு என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் ஓட்டல்  ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 15-ஆம் தேதி பாலுவின் ஓட்டலுக்கு சாப்பிட வந்த வட மாநிலத்தை சேர்ந்த 3  பேர் பாலுவை சந்தித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து  தங்களுக்கு புதையல் கிடைத்ததாகவும், அதனை குறைந்த விலைக்கு கொடுப்பதாகவும் கூறியுள்ளனர். மேலும் அவர்கள் பாலுவை  நம்ப வைப்பதற்காக  ஒரு  நகையை கொடுத்துள்ளனர்.

அதனை பாலு வாங்கி சோதனை செய்ததில் அந்த நகை  உண்மையான தங்கம் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பாலு கடந்த 20-ஆம் தேதி அந்த வட மாநில கும்பலை நேரில் சந்தித்து 5 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து 1 3/4 கிலோ தங்க நகையை  வாங்கியுள்ளார். அதன் பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது அந்த நகைகள் போலியானது என்பது தெரியவந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த  பாலு உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பண மோசடி செய்த அந்த வட மாநில கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |