Categories
மாநில செய்திகள்

கமிஷனர் அலுவலகம் முன்… 2 மணிநேரம் வாலிபர் செய்த செயல்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!!

சென்னை சித்தாலபாக்கத்தில் வசித்து வருபவர் வாலிபர் ஆனஸ்ட்ராஜ் (29). இவர் மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இதில் ஆனஸ்ட்ராஜ் கோழிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இதனிடையில் திருந்தி வாழ்வதாக அறிவித்துள்ள அவர் நேற்று காலை தன் மனைவி விஜயாவுடன் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். இந்நிலையில் திடீரென ஆனஸ்ட்ராஜ் தான் மறைத்து வைத்திருந்த பிளேடு, பேனா கத்தி ஆகியவற்றால் உடல் முழுதும் வெட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். அப்போது காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்த பெண் காவல்துறையினர் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களையும் வெட்டி விடுவதாக ஆனஸ்ட்ராஜ் மிரட்டினார். இவர் கஞ்சா போதையில் இருந்ததாக தெரிகிறது. கமிஷனர் அலுவலக வளாகத்தில் ஆனஸ்ட்ராஜ் அங்குமிங்கும் ஓடியபடி இருந்தார். இதையடுத்து போலீஸ்காரர் ஒருவர் துணிச்சலாக வாலிபர் ஆனஸ்ட்ராஜை மடக்கி பிடித்து அவர் கையில் வைத்திருந்த பிளேடையும், கத்தியையும் பிடுங்கினார்.

“தன் அண்ணன் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரை பார்க்கச்சென்றபோது அங்கு காவலுக்கு இருந்த காவல்துறையினர் தன்னை தாக்கி, பணத்தை பறித்துக்கொண்டனர். இதனால் அந்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த வாலிபர் தொடர்ந்து அடம்பிடித்தார். கமிஷனர் அலுவலகத்தில் சுமார் 2 மணிநேரம் இருந்த ஆனஸ்ட்ராஜிடம், இறுதியில் வேப்பேரி உதவி போலீஸ் கமிஷனர் அரிக்குமார் நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்தி ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி அழைத்து சென்றார். அதன்பின் அந்த வாலிபர் அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அதனை தொடர்ந்து அவர்மீது தற்கொலைக்கு முயற்சி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவத்தால் நேற்றுகாலை முதல் பகல்வரை போலீஸ் கமிஷனர் அலுவலகம் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

Categories

Tech |