சிறப்பாக பணியாற்றிய 2 மருத்துவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ்களை வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 2 மருத்துவர்களுக்கு தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவினர் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களை அனைத்து புள்ளி விவரங்களின் அடிப்படையில் தேர்வு செய்தனர்.
அதன்படி தேர்வு செய்யப்பட்ட ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் குழந்தை நல மருத்துவர் ராஜேஷ்குமார் மற்றும் சாமுவேல் சந்திரசேகரன் ஆகிய 2 மருத்துவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா சான்றிதழ் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் வில்சன் ராஜசேகர், ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து, மருத்துவம் மற்றும் சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அலுவலர் ஆசைத்தம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.