Categories
உலக செய்திகள்

அடுத்தடுத்து 3 சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…. 5 பேர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

ஈரான் நாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 5 பேர் பலியாகியுள்ளனர். 

ஈரான் நாட்டில் தெற்கே ஹார்முஜ்கன் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் இன்று அதிகாலை திடீரென  கூடுதலான சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து மூன்று முறை ஏற்பட்டுள்ளது. அதன்படி முதல் நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது தரைப்பகுதியில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.  இதனை தொடர்ந்து சில மணிநேரம் கழித்து  இரண்டாவது நிலநடுக்கமானது அளவுகோலில்  6.3 ஆக பதிவாகியுள்ளது.

இந்நிலையில் மூன்றாவதாக  4.0 ரிக்டர் அளவுகோலில் கூடுதலான நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து உணரப்பட்டுள்ளன. இதனால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த நிலநடுக்கத்தினால் கிராம பகுதிகளில் சில வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும் சாலைகளில் சில பகுதிகள் நில சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து அந்நாட்டு அவசரகால செய்தி தொடர்பாளர் மொஜ்தபா காலேதி கூறியதாவது, “இந்த  நிலநடுக்கம் பாதித்த பகுதிகளுக்கு ஆம்புலன்ஸ்களும், ஹெலிகாப்டர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இங்கு சில பகுதிகளில் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டன. பின்னர் அவை சரி செய்யப்பட்டன” என அவர் கூறியுள்ளார்.  ஈரானில் அடுத்தடுத்து ஏற்பட்ட 3 சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 49 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களை மீட்பு குழுவினர்கள் மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.

Categories

Tech |