கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மத்திய நிதிநிலை அறிக்கை தாக்குதலுக்குப் பிறகு பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது. அதன்படி, சென்செக்ஸ் வர்த்தக முடிவின்போது 900 புள்ளிகளுக்கு மேல் கடுமையாகச் சரிந்தது. இதனால் சென்செக்ஸில் முதலீடு செய்தவர்கள் அனைவரும் கலக்கமான நிலையில் இருந்தனர்.
இதனை உணர்ந்த நிர்மலா சீதாராமன் பொறுமையாக இருக்குமாறும், திங்கள்கிழமை (அதாவது இன்று) பங்குச்சந்தை தொடங்கும்போது மாற்றம் ஏற்படும் என்றும் நம்பிக்கைத் தெரிவித்தார். மேலும் அதுவரை காத்திருக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், இன்று தொடங்கிய பங்குச்சந்தை சரிவுடனே ஆரம்பமானது வர்த்தகர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்ன வார்த்தை மெய்யாகும் என சமூக வலைதளங்களில் கேள்வியெழுப்பப்பட்டுவருகிறது.
இன்று தொடங்கிய பங்குச்சந்தையில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 82.28 புள்ளிகள் சரிந்து 39,653.25 எனவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 35.45 சரிந்து 11,697.30 எனவும் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளது.