உலக நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கிறது. இதனால் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் நேற்றிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. அதன்படி தமிழகத்தில் உலக பிளாஸ்டிக் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் “பின்னோக்கி ஓடும்” நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிளாஸ்டிக் எந்த அளவுக்கு சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது என்றும் மற்ற உயிரினங்களுக்கும் எந்த அளவு அழிவை ஏற்படுத்தக்கூடியது என்றும் மக்களை உணர வேண்டும் என்பதற்காக பிளாஸ்டிக் தடுப்பதற்கான விழிப்புணர்வு முகாம் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை குறைப்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் மஞ்சப்பை திட்டத்தை கொண்டு வந்துள்ளார். இதனையடுத்து பெரும்பாலான பொதுமக்கள் மார்டன் என்ற பெயரில் பழைய கலாச்சாரத்தை மாற்றி வருகின்றன. இதனால் பெரிய அளவில் சுகாதார சீர்கேடும், பல நோய்களும் பரவுவதற்கு காரணமாக இருக்கிறது. இதற்கு முன்பெல்லாம் வீட்டில் முன்பு சாணி தெளித்து அரிசி மாவில் கோலம் போடுவார்கள். ஆனால் தற்போது சாணி பவுடர் வாங்கி வைத்துக்கொண்டு அதை தெளிக்கின்றனர். மேலும் பழைய கலாச்சாரத்தை மறந்துவிடாமல் அதனை பின்பற்ற வேண்டும் என்று அமைச்சர் மா சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.