Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

முடியை வெட்டுமாறு வற்புறுத்திய பெற்றோர்…. கல்லூரி மாணவர் தற்கொலை…. பெரும் சோகம்…!!

கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கெலடிப்பேட்டை அண்ணா தெருவில் செழியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இலக்குவன்(19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் மாங்காட்டில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற இலக்குவன் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் தங்களது மகனை கண்டுபிடித்து தருமாறு மாணவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த குன்றத்தூர் போலீசார் மாணவரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் கிணற்றில் இலக்குவன் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த சில மாதங்களாக இலக்குவன் தலைமுடியை வெட்டாமல் நீளமாக வளர்த்தது தெரியவந்தது. இந்நிலையில் மாணவரின் பெற்றோர் முடியை வெட்டுமாறு வற்புறுத்தியுள்ளனர். இதனால் கோபத்தில் வீட்டை விட்டு வெளியே சென்று இலக்குவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |