பேருந்து மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கொத்தனேரி தெற்கு தெருவில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூராக்காள் என்ற மனைவி இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சூராக்காள் பட்டாசு ஆலைக்கு பேருந்தில் சென்றுள்ளார். இதனை அடுத்து எம்.மேட்டுப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்து சென்ற போது எதிர்பாராதவிதமாக பேருந்து சூராக்காள் மீது மோதியது.
இதனால் உடல் நசுங்கி படுகாயம் அடைந்த பெண்ணை அருகில் இருந்தவர்கள் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று சூராக்காள் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.