நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் விழாவில் முதல்வர் கலந்து கொள்கிறார்.
நாமக்கல் மாவட்டத்தில் நாளை விழா ஒன்று நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை புரிகிறார். இந்நிலையில் லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் மற்றும் மாநில சம்மைளன செயலாளர் வாங்கிலி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில் முதல்வரின் வருகையை முன்னிட்டு நகர எல்லைக்குள் லாரிகள், கண்டெய்னர்கள் உள்ளிட்ட கனரக வாகனங்களை இயக்க வேண்டாம் என கூறியுள்ளார். மேலும் பைபாஸ் ரோடுகள் மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் லாரிகளை இயக்கி காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு தருமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.