Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ஆபத்தை விளைவிக்கும் போதை பொருட்கள்…. நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கம்…. கலந்து கொண்ட பலர்….!!

கட்டிமேடு அரசு பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் காவல்துறையினர் சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு தலைமை ஆசிரியர் மு.ச.பாலு தலைமை தாங்கினார். இதனையடுத்து முதுகலை ஆசிரியர் கவியரசன் வரவேற்று பேசினார். மேலும் இந்த கருத்தரங்கத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் பேசினார். அதில் இந்த விழிப்புணர்வு கருத்தரங்கம் மாணவர்கள் ஒருங்கிணைந்து தீய செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக நடத்தப்படுகிறது.

இந்நிலையில் போதை பொருட்கள் தனி நபரின் உடல், மனம் இரண்டையும் சிதைக்கிறது.  மேலும் சமூகத்துக்கு பெரும் ஆபத்தை போதை பொருட்கள் விளைவிக்கின்றன. இதனை தொடர்ந்து ஆப்பிரிக்க நாடுகளில் போதைப்பொருட்களின் பழக்கம் அதிகம் இருப்பதால் அந்த நாடுகள் முன்னேறாமல் உள்ளன எனவும், இந்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்துவதன் மூலம் போதை பொருள் இல்லா உலகம் படைக்க நம்மால் இயன்ற முயற்சிகளை எடுப்போம் என உறுதிமொழி ஏற்றனர். இதனையடுத்து கருத்தரங்கத்தின் முடிவில் முதுகலை ஆசிரியர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.

Categories

Tech |