Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…ஆரோக்கியம் சீராக இருக்கும்…எதிலும் முன்னேற்றம் காணப்படும்..!!

தனுசு ராசி அன்பர்களே, இன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். அரசு காரியங்கள் அனுகூலமாக முடியும். அரைகுறையாக நின்ற பணியை மீண்டும் தொடர்வீர்கள். சாமர்த்தியமான செயல்பாடுகளால் சாதனை படைப்பீர்கள். பயணங்களால் பலன் உண்டாகும். இன்று  எதிலும் முன்னேற்றம் ஏற்படும்.

கணவன் மனைவிக்கு இடையே சகஜ நிலை இருக்கும். பிள்ளைகள் கல்வியில் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும். பெண்கள் உங்களது செயல்களுக்கு மற்றவர்களது ஆதரவு கிடைக்கும். இன்று எந்த ஒரு விஷயத்தையும் சிறப்பாக செய்வீர்கள்.

இன்று  பழைய கடன்கள் கொஞ்சம் அடைபடும் நாளாகவே இருக்கும். இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு எப்பொழுதுமே அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவிலேயே இருக்கும்.

அதுமட்டுமில்லாமல் என்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் இளம் பச்சை

Categories

Tech |