காஞ்சிபுரத்தில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்ட வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பழைய ரயில் நிலையம் அருகே இருக்கும் வையாவூர் சாலையைச் சேர்ந்த பூ வியாபாரியான மோகன் என்பவர் தனது வியாபாரத்திற்காக வேன் வைத்திருந்தார்.
இவர் தினந்தோறும் வீட்டின் முன்புறத்தில் வேனை நிறுத்தி வைப்பது வழக்கம். இந்த நிலையில் சென்ற ஒரு வாரமாக வேனை இயக்காத நிலையில் நேற்று காலை திடீரென வேன் தீப்பற்றி எரிந்ததையடுத்து அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.