Categories
தேசிய செய்திகள்

திருப்பதி தேவஸ்தானத்திடம்…. 16 லட்ச ருபாய் கேட்கும் மாநில அரசு…. என்ன காரணம் தெரியுமா….?

திருப்பதி தேவஸ்தானத்திடம் மாநில அரசு ஒரு கோரிக்கையை விடுத்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பாட புத்தகங்களை இலவசமாக மாநில அரசு வழங்கும். அதேபோன்று நடப்பாண்டிலும் இலவச பாட புத்தகங்களை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு 16 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. ஆனால் நிதி பற்றாக்குறை காரணமாக கடந்த ஆண்டு படித்த மாணவர்களிடமிருந்து புத்தகங்களை வாங்கி நடப்பாண்டில் படிக்கும் மாணவர்களுக்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருப்பதி தேவஸ்தானத்திற்கு மாநில அரசு ஒரு கடிதம் எழுதிய அனுப்பியுள்ளது.

அதில் ஆந்திர மாநிலத்தில் மொத்தம் 452 கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு 16 லட்சம் ரூபாய் நிதி தேவைப்படுகிறது. ஆனால் நிதி பற்றாக்குறை காரணமாக மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்களை வழங்க முடியவில்லை. எனவே திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக அன்னதானம், லட்டு போன்றவற்றை வழங்குகிறீர்கள். அதேபோன்று மாணவர்களின் கல்விக்காக 16 லட்சம் ரூபாயை பிரசாத திட்டத்தில்  தரும்படி கேட்டுக்கொள்கிறோம் என எழுதப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆலோசனை நடத்தி நல்ல முடிவு எடுக்கப்படும் என தேவஸ்தானம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |