Categories
மாநில செய்திகள்

12 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம்…. மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதா….? நீதிமன்றத்தின் உத்தரவு….!!!

சமுதாய நலக்கூடம் பயன்பாட்டிற்கு வந்துள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சின்னசேலம் அருகே அனுமந்தல் கிராமம் அமைந்துள்ளது. இங்கு கடந்த 2008-2009-ம் ஆண்டில் நபார்டு வங்கி மற்றும் தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சமுதாய நலக்கூடத்தை கட்டியுள்ளனர். இதற்காக 15 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த சமுதாய நலக்கூடத்தின் பணிகள் கடந்த 2009 ஆம் ஆண்டு முடிவடைந்துள்ளது.

ஆனால் பொது மக்களின் பயன்பாட்டிற்கு சமுதாய நலக்கூடம் இதுவரை திறக்கப்படவில்லை என உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சமுதாய நலக்கூடம் திறக்கப்பட்டு விட்டதாகவும், ஆனால் பொதுமக்கள் சுப நிகழ்ச்சிகளை கோவில்கள் மற்றும் வேறு இடங்களில் நடத்துவதாகவும் கூறினார். இதன் காரணமாக நீதிபதி சமுதாய நலக்கூடம் பயன்பாட்டிற்கு வந்து விட்டதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி கூறினார். மேலும் இந்த வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளார்.

Categories

Tech |