Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

துணிக்கடைக்கு சென்ற சிறுமி…. கடத்தி சென்ற வாலிபர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் 9-ஆம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு சிறுமி அப்பகுதியில் இருக்கும் துணி கடைக்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு புறப்பட்டார். அப்போது திண்டிவனம் காந்திநகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சுபாஷ் என்பவர் சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் சுபாஷை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் சுபாஷுக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.

Categories

Tech |