மளிகை கடைக்குள் பாம்பு புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூக்கல் தொரை பகுதியில் பாபு என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்குள் 10 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று நுழைந்தது இதனை பார்த்து அதிர்ச்சடைந்த பாபு அலறியடித்து கொண்டு கடையை விட்டு வெளியே ஓடி வந்துள்ளார். இதனை அடுத்து அந்த பாம்பு கடையில் இருந்த அலமாரிகளின் மேல் ஏறி பரணில் படுத்துக்கொண்டது. இதனை பார்த்த சில வாலிபர்கள் கடைக்குள் சென்று நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அந்த பாம்பை பிடித்து சாக்கு பையில் போட்டனர். இதனை அடுத்து வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பாம்பு காட்டுப்பகுதியில் விடப்பட்டது.